< Back
தேசிய செய்திகள்
பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னிலைப்படுத்த பா.ஜ.க. உழைத்து வருகிறது - ஜே.பி.நட்டா
தேசிய செய்திகள்

பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னிலைப்படுத்த பா.ஜ.க. உழைத்து வருகிறது - ஜே.பி.நட்டா

தினத்தந்தி
|
17 Nov 2024 9:07 PM IST

பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னிலைப்படுத்த பா.ஜ.க. உழைத்து வருகிறது என ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டசபை தொகுதிகளில், முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. மீதம் உள்ள 38 தொகுதிகளுக்கு வரும் 20-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தபோதுதான் மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்டது. ராகுல் காந்தி பவுண்டேஷனில் எத்தனை ஓ.பி.சி. பிரிவினர் இருக்கிறார்கள் என்பதை அவரால் கூறமுடியுமா? காங்கிரஸ் செயற்குழுவில் எத்தனை ஓ.பி.சி. பிரிவினர் இருக்கிறார்கள் என்று கூற முடியுமா?

பிரதமர் மோடியின் மந்திரி சபையில் 27 மந்திரிகள் ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதை என்னால் கூற முடியும். பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னிலைப்படுத்த பா.ஜ.க. அரசு உழைத்து வருகிறது. பழங்குடியின மக்களுக்கான பட்ஜெட்டை பிரதமர் மோடி 3 மடங்காக உயர்த்தியுள்ளார்."

இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்