< Back
தேசிய செய்திகள்
வலுவான எதிர்க்கட்சிகளுக்கு இடையே 3-வது முறையாக ஆட்சியை பிடித்தது பா.ஜ.க.:  நட்டா பெருமிதம்
தேசிய செய்திகள்

வலுவான எதிர்க்கட்சிகளுக்கு இடையே 3-வது முறையாக ஆட்சியை பிடித்தது பா.ஜ.க.: நட்டா பெருமிதம்

தினத்தந்தி
|
7 Dec 2024 10:53 PM IST

நாட்டில் எதிர்க்கட்சிகள் வலுவாக இருந்தபோதும், 3-வது முறையாக மோடி பிரதமராவதற்கு நாட்டு மக்கள் தொடர்ந்து ஆதரித்தனர் என்று நட்டா பேசியுள்ளார்.

ரங்காரெட்டி,

தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நடந்த அரசியல் பொது கூட்டம் ஒன்றில் மத்திய மந்திரி மற்றும் பா.ஜ.க. தலைவரான ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசும்போது, 70 ஆண்டுகளாக நாட்டில் அரசியல் தலைவர்களுக்கு எதிரான அலைகளையே நாம் கேள்விப்பட்டு வந்திருக்கிறோம்.

அரசுகள் வரும், போகும். ஆனால், மோடி பிரதமரான பின்னர், அரசு நீடிப்பதற்கான ஆதரவு அலையை நாடு முதன்முறையாக பார்க்கிறது. பா.ஜ.க. ஆட்சியமைக்கும்போது, அது ஒரு முறை என்றில்லாமல், பல முறை ஆட்சியில் மக்களுக்கு சேவை செய்கிறது. இதுவே பா.ஜ.க.வின் கலாசாரம் என்றார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பேசினார். நேருவை போன்று இல்லாமல், வலுவான எதிர்க்கட்சிகளுக்கு இடையே பிரதமர் மோடி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளார். தொடர்ந்து 3 முறை பிரதமரானவர் என்றால் அது பிரதமர் மோடிதான்.

நேரு பிரதமரானபோது, காங்கிரஸ் மீது உலகம் முழுவதும் மற்றும் நாட்டிலும் மகிழ்ச்சியான உணர்வு இருந்தது. வலிமை குன்றிய எதிர்க்கட்சிகளே காணப்பட்டன. மோடி பிரதமரானபோது, எதிர்க்கட்சிகள் வலுவாக இருந்தன. ஆனால், நாட்டு மக்கள் அப்போதும் மோடியை ஆதரித்தனர். பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வேலை செய்யும் கலாசார வேற்றுமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நட்டா பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்