மராட்டிய மாநில பா.ஜ.க. மாநாடு: ஷீரடியில் அடுத்த மாதம் நடக்கிறது
|கூட்டத்தில் இளம் தொண்டர்களை உத்வேகப்படுத்தும் வகையில் பிரசாரம் செய்யப்பட உள்ளது.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 132 தொகுகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இதேபோல பா.ஜனதா தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்று உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பின்னடைவுக்கு பிறகு கிடைத்த சட்டசபை தேர்தல் இமாலய வெற்றி பா.ஜனதாவினருக்கு புதிய உத்வேகத்தை அளித்து உள்ளது. இந்தநிலையில் மராட்டிய மாநில பா.ஜனதா மாநாடு அடுத்த மாதம் (ஜனவரி) 12-ந்தேதி ஷீரடியில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் இளம் தொண்டர்களை உத்வேகப்படுத்தும் வகையில் பிரசாரம் செய்யப்பட உள்ளது. மேலும் மராட்டிய சட்டசபை தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக உழைத்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டவர்கள் கூட்டத்தில் கவுரவிக்கப்பட உள்ளனர்.