< Back
தேசிய செய்திகள்
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கேரளா பயணம்; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
தேசிய செய்திகள்

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கேரளா பயணம்; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

தினத்தந்தி
|
9 July 2024 4:29 PM IST

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கேரளாவுக்கு, நட்டா மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

திருவனந்தபுரம்,

பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கேரளாவுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சென்றடைந்த அவருக்கு, கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன் பின்னர், முக்கிய கூட்டமொன்றில் அவர் கலந்து கொண்டார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கேரளாவுக்கு, நட்டா மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இந்த தேர்தலில், பா.ஜ.க. மக்களவை தொகுதியை கைப்பற்றி, கேரளாவில் தன்னுடைய வெற்றி கணக்கை தொடங்கியதுடன், குறிப்பிட்ட அளவில் கூடுதலான வாக்குகளையும் பெற்றிருந்தது. 10-க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது.

அக்கட்சி, கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் பத்தனம்திட்டா உள்ளிட்ட மக்களவை தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது. பா.ஜ.க.வை சேர்ந்த நடிகரான சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் கேரளாவில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பா.ஜ.க. எம்.பி.யானார்.

மேலும் செய்திகள்