< Back
தேசிய செய்திகள்
பாலியல் புகார் வழக்கில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. கைது
தேசிய செய்திகள்

பாலியல் புகார் வழக்கில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. கைது

தினத்தந்தி
|
20 Sept 2024 5:33 PM IST

பாலியல் புகார் வழக்கில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் மந்திரியும், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வுமான முனிரத்னா மீது 40 வயதான சமூக ஆர்வலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை, குற்றவியல் மிரட்டல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த புகாரில் கடந்த 2020ம் ஆண்டு கக்கலிபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு தனியார் ரிசார்ட்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். மேலும் புகாரின்படி, விஜய குமார், சுதாகரா, கிரண் குமார், லோஹித் கவுடா, மஞ்சுநாத் மற்றும் லோகி ஆகிய 6 பேருடன் சேர்ந்து முனிரத்னா தன்னை பல ஆண்டுகளாக அச்சுறுத்தும் வகையில் ஆட்சேபகரமான வீடியோக்களை பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் முனிரத்னா மீது பல்வேறு பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த ஒரே வாரத்தில் முனிரத்னா மீது சுமத்தப்பட்டுள்ள 3வது புகார் இதுவாகும்.

இந்நிலையில், பாலியல் துன்புறுத்தல் மற்றும் குற்றவியல் மிரட்டல் வழக்கு தொடர்பாக வழக்குகளில் முனிரத்னாவை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். முன்னதாக கார்ப்பரேட்டரை மிரட்டியதாகவும், சாதி ரீதியாக திட்டியதாகவும் கைது செய்யப்பட்ட எம்எல்ஏ முனிரத்னா நிபந்தனை ஜாமீனில் நேற்று வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நிபந்தனை ஜாமீன் பெற்ற மறுநாளே முனிரத்னா கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்