< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பா.ஜ.க. புதிய உறுப்பினர்களில் இளைஞர்கள் அதிகம் - ஜே.பி.நட்டா தகவல்
|22 Oct 2024 5:53 AM IST
பா.ஜ.க. புதிய உறுப்பினர்களில் 61 சதவீதம்பேர், 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்று ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பா.ஜ.க. உட்கட்சி தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பேசிய பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, "தற்போது நடந்து வரும் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கையில், இதுவரை கட்சியில் சேர்ந்தவர்களில் 61 சதவீதம்பேர், 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்" என்று கூறினார்.
இந்த தகவலை பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா நிருபர்களிடம் தெரிவித்தார். பா.ஜ.க.வில் சேர்ந்தவர்கள் மொத்த எண்ணிக்கை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.