< Back
தேசிய செய்திகள்
கர்நாடகா இடைத்தேர்தலில் பாஜக தோல்வி... ஆத்திரத்தில் டிவியை உடைத்த தொண்டர்
தேசிய செய்திகள்

கர்நாடகா இடைத்தேர்தலில் பாஜக தோல்வி... ஆத்திரத்தில் டிவியை உடைத்த தொண்டர்

தினத்தந்தி
|
24 Nov 2024 6:53 AM IST

கர்நாடகா இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் சென்னபட்டணா (ராமநகர் மாவட்டம்), சிக்காவி (ஹாவேரி மாவட்டம்), சண்டூர் (பல்லாரி மாவட்டம்) ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. அந்த தொகுதிகளுக்கு கடந்த 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. இந்த தேர்தல் முடிவுகளை டிவி மூலம் பார்த்த காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரம் தேர்தல் முடிவுகள் பாஜக தொண்டர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே விஜயாப்புரா மாவட்டம் ஹொல்கார் பகுதியை சேர்ந்தவர் வீரபத்ரப்பா. பாஜக தொண்டரான இவர் நேற்று டிவியில் தேர்தல் முடிவுகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது 3 தொகுதிகளிலும் பா.ஜனதா தோல்வியடைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த வீரபத்ரப்பா, டிவியை வீட்டில் இருந்து வெளியே தூக்கி வந்து சாலையில் போட்டு உடைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்