< Back
தேசிய செய்திகள்
டெல்லியை போல பாஜகவால் பீகாரில் வெற்றி பெற முடியாது - லாலு பிரசாத் யாதவ்
தேசிய செய்திகள்

டெல்லியை போல பாஜகவால் பீகாரில் வெற்றி பெற முடியாது - லாலு பிரசாத் யாதவ்

தினத்தந்தி
|
13 Feb 2025 7:15 PM IST

பீகாரில் வரும் அக்டோபர் - நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

பாட்னா,

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் பிப்.8-ம் தேதி வெளியானது. இதில் 48 இடங்களில் அமோக வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி 22 இடங்களை மட்டுமே பிடித்தது.முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்தார். கடந்த 2 முறை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கட்டிலில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் பெரும் பின்னடைவை சந்தித்தது.

டெல்லி தேர்தல் வெற்றியை அடுத்து, இந்த ஆண்டு அக்டோபர் - நவம்பரில் நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலிலும் டெல்லியின் முடிவுகள் எதிரொலிக்கும் என்றும், அங்கும் பாஜக வெற்றி பெறும் என்றும் அக்கட்சியினரும், அதன் கூட்டணி கட்சியினரும் பேசி வருகின்றனர்.

இது குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும் , ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ்,

டெல்லி தேர்தல் முடிவின் தாக்கம் பீகார் தேர்தலில் எதிரொலிக்காது. இங்கு அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். நாங்கள் (ராஷ்டிரிய ஜனதா தளம்) இங்கே இருக்கும் வரை பாஜக பீகாரில் ஆட்சி அமைக்க முடியாது. மக்கள் பாஜகவையும் உங்களையும் (ஊடகங்களை) புரிந்து கொண்டுள்ளனர். அப்படியானால், பீகாரில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆட்சி அமைப்பார் என்று கூறினார்.

மேலும் செய்திகள்