< Back
தேசிய செய்திகள்
மக்களை மத அடிப்படையில் பாஜக பிரிக்க முயற்சிக்கிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

PTI

தேசிய செய்திகள்

மக்களை மத அடிப்படையில் பாஜக பிரிக்க முயற்சிக்கிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
8 Nov 2024 5:28 PM IST

பழங்குடியினருக்காக நான் குரல் எழுப்பும்போது, இந்தியாவை பிரிப்பதாக பாஜக குற்றம் சாட்டியது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராஞ்சி,

81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு வரும் 13 மற்றும் 20 தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அங்கு பல்வேறு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டோகா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது,

பாஜக மணிப்பூரை எரித்து மக்களை மத அடிப்படையில் பிரிக்க முயற்சித்தது. அது இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்களை ஒருவருக்கொருவர் எதிராக தூண்டியது. சமீபத்தில் நடைபெற்ற அரியானா தேர்தலி, ஜாட் அல்லாதவர்களுக்கு எதிராக பாஜக ஜாட்களை தூண்டியது.

பழங்குடியினர் மற்றும் தலித்துகளுக்காக நான் குரல் எழுப்பும்போது, இந்தியாவை பிரிப்பதாக பாஜக குற்றம் சாட்டியது. இந்தியாவை ஒருங்கிணைத்து வலுப்படுத்த நான் இங்கு வந்துள்ளேன். பழங்குடியினர், தலித்துகள் மற்றும் ஓபிசிக்களுக்காக நான் குரல் எழுப்பியது தவறு என்றால், நான் அதை தொடர்ந்து செய்வேன்.

பாஜக 16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 25 முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் இந்தியா கூட்டணி ஆட்சியின் போது விவசாயிகளின் 72,000 கோடி ரூபாய் கடன்களை தளர்த்தியது.

ஜார்க்கண்ட் விவசாயிகளின் கடனை பாஜக அரசு தள்ளுபடி செய்ததா? இல்லை ஏனென்றால் நீங்கள் பழங்குடியினர், தலித்துகள் மற்றும் ஓபிசிக்கள் என்பதால் தான். முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்வதால் உங்கள் கடனை பாஜக ஒருபோதும் தள்ளுபடி செய்யாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்