< Back
தேசிய செய்திகள்
காலை நடைபயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிய தொழிலதிபர் சுட்டுக்கொலை...டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்
தேசிய செய்திகள்

காலை நடைபயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிய தொழிலதிபர் சுட்டுக்கொலை...டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
7 Dec 2024 2:14 PM IST

தப்பியோடிய குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

புதுடெல்லி,

கிழக்கு டெல்லியின் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சுனில் ஜெயின் (52). பத்திரங்கள் வியாபாரம் செய்யும் தொழிலதிபரான சுனில் இன்று காலை ஷாஹ்தராவில் உள்ள யமுனா ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் நடைபயிற்சி முடித்து ஸ்கூட்டியில் வீடு திரும்பி கொண்டிருந்தார். பார்ஷ் பஜார் பகுதியில் வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சுனிலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தப்பியோடிய குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட துணை போலீஸ் கமிஷனர் பிரசாந்த் கவுதம் கூறுகையில், துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசாருக்கு காலை 8.36 மணிக்கு அழைப்பு வந்தது. சுனிலின் குடும்ப உறுப்பினர்களின் கேட்ட போது அவருக்கு யாருடனும் எந்த விரோதமும் இல்லை என்று தெரிவித்தனர். மேலும் குற்றவாளிகளை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர் என்றார்.

மேலும் செய்திகள்