< Back
உலக செய்திகள்
முறைகேடு புகார்: அதானி  மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு
உலக செய்திகள்

முறைகேடு புகார்: அதானி மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
21 Nov 2024 7:39 AM IST

பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்

சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பாக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், தனது தவறை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மறைத்து, அதானி தனது திட்டத்திற்காக பெரும் தொகையை திரட்டினார் என்றும் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து நியூயார்க் பெடரல் கோர்ட்டில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது.

அதானியின் உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் மீதும் அமெரிக்கா புகார் அளித்துள்ளது. இதே புகாரில் அமெரிக்கா பங்கு பரிவர்த்தனை ஆணையமும் அதானி மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து அதானியோ, இந்திய தூதரகமோ இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

முன்னதாக, அதானி குழுமம், பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு, தங்கள் நிறுவன பங்குகளை போலியாக அதிகரிக்கச் செய்வதாக அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்திற்குள்ளானது.

மேலும் செய்திகள்