பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு
|சம்பந்தப்பட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
பாட்னா,
பீகாரின் சிவான் மாவட்டத்தில் பகவான்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மதர் கிராமத்தில் சிலரும், சரண் மாவட்டத்தை சேர்ந்த சிலரும் உள்ளூரில் உள்ள கடை ஒன்றிற்கு சென்று, சாராயம் குடித்துள்ளனர். இதனை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற அவர்களில் சிலருக்கு பார்வை இழப்பு, வாந்தி மற்றும் வயிற்று வலி ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து கள்ளச்சாராயம் குடித்த 49 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் ஏற்கனவே 20 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மாகர் மற்றும் அவுரியா ஊராட்சியை சேர்ந்த 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.