< Back
தேசிய செய்திகள்
பீகார்: அவுரங்காபாத்தில் 5 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்
தேசிய செய்திகள்

பீகார்: அவுரங்காபாத்தில் 5 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

தினத்தந்தி
|
9 July 2024 1:33 PM IST

வெடிகுண்டுகள் காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப்படையினரை குறிவைக்கும் வகையில் வைக்கப்பட்டன என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாட்னா,

நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் அவர்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையில் 5 சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை பாதுகாப்புப்படையினர் இன்று மீட்டுள்ளனர்.

இதுகுறித்து, மதன்பூரின் துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி அமித் குமார் கூறியதாவது, "மதன்பூரின் காடு மற்றும் மலைப்பகுதியில் கடந்த 48 மணி நேரமாக கோப்ரா மற்றும் மாவட்ட போலீசாரின் 205 பட்டாலியன்களின் கூட்டு தேடுதல் பணி நடந்து வருகிறது. இந்த தேடுதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சில பெரிய குற்றங்களை செய்யும் நோக்கத்துடன் வைத்திருந்த 5 சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை பாதுகாப்புப்படையினர் மீட்டனர்.

வெடிகுண்டு நிபுணர்களால் 5 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் செயலிழக்கப்பட்டது. மேலும் அவை மிகவும் வெடிக்கும் திறன் கொண்டவை, காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப்படையினரை குறிவைக்கும் வகையில் வைக்கப்பட்டன. அவைகள் தகுந்த நேரத்திற்கு முன்பே செயலிழக்க செய்யப்பட்டது. நக்சலைட்டுகளுக்கு எதிரான சிறப்பு இயக்கம் மேலும் தொடரும்." இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்