< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பெங்களூரு: எலக்ட்ரிக் பைக் ஷோருமில் தீ விபத்து - பெண் ஊழியர் உயிரிழப்பு
|19 Nov 2024 9:23 PM IST
எலக்ட்ரிக் பைக் ஷோருமில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண் ஊழியர் உயிரிழந்தார்.
பெங்களூரு,
பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியில் உள்ள எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் இன்று மாலை 5.30 மணியளவில் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த சமயத்தில் பணியில் இருந்த 5 ஊழியர்கள் உடனடியாக ஷோரூமில் இருந்து வெளியேறிய நிலையில், 20 வயது பெண் ஊழியர் ஒருவர் உள்ளே சிக்கிக் கொண்டார்.
இதனிடையே தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் 40 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் ஷோரூமுக்குள் சிக்கிய பிரியா என்ற பெண் ஊழியர், தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். எரிந்த நிலையில் கிடந்த அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.