சாரல் மழைக்கு நடுவே நடுரோட்டில் காரை நிறுத்தி முத்தமழை பொழிந்த காதல் ஜோடி
|காதல் ஜோடி இருந்த காரில் டாக்டர்கள் பயன்படுத்தும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
பெங்களூரு,
பெங்களூருவில் காதல் ஜோடிகள் அவ்வப்போது பொது இடங்களில் அத்து மீறும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. மெட்ரோ ரெயில்கள், பூங்காக்களில் அவர்கள் அத்துமீறலில் ஈடுபடுவது, குடும்பத்துடன் செல்பவர்களை முகம் சுழிக்க வைக்கும். இந்த நிலையில் சாலையின் நடுவே காரை நிறுத்திவிட்டு காதல் ஜோடி முத்த மழை பொழிந்த சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு புறநகர் நெலமங்களா டவுன் பகுதியில் பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. அந்த பஸ் நிறுத்தம் அருகே சாலையில் கார் ஒன்று சென்றது. அந்த கார் திடீரென சாலையில் நடுவே நிறுத்தப்பட்டது. அந்த சமயத்தில் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இந்த நிலையில் சாலையின் நடுவே நின்ற காரின் உள்ளே காதல் ஜோடி அத்துமீறலில் ஈடுபட்டு முத்த மழை பொழிந்தனர். இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
எனினும் பொது மக்களை கண்டுகொள்ளாமல் அவர்கள் தொடர்ந்து முத்தமழை பொழிந்து கொண்டிருந்தனர். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பொது இடத்தில் இதுபோன்று முகம் சுழிக்க வைக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த காரில் டாக்டர்கள் பயன்படுத்தும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. எனவே டாக்டர் ஜோடிஅத்துமீறலில் ஈடுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.