< Back
தேசிய செய்திகள்
கிரிக்கெட் விளையாடும் போது காயமடைந்த மாணவி உயிரிழப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

கிரிக்கெட் விளையாடும் போது காயமடைந்த மாணவி உயிரிழப்பு

தினத்தந்தி
|
31 Oct 2024 3:03 PM IST

கிரிக்கெட் விளையாடும் போது பந்து தலையில் விழுந்து காயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மும்பை,

கேரளாவில் கிரிக்கெட் விளையாடும் போது பந்து தலையில் விழுந்து காயமடைந்த மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மாணவி தபஸ்யா (15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

10 நாட்களுக்கு முன், பள்ளியில் விளையாட்டு நேரத்தின் போது, கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவியின் தலையில் பந்து விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து அருகில் இருந்த கோட்டக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கோழிக்கோடு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் மாணவியின் குடும்பத்தினர், அவரை மும்பை உள்ள மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சைபெற்று வந்தநிலையில் இன்று உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்