< Back
தேசிய செய்திகள்
மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை தவிருங்கள் -பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை தவிருங்கள் -பிரதமர் மோடி

தினத்தந்தி
|
21 Feb 2025 9:31 PM IST

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மும்பை,

சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350-வது ஆண்டு மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் நூற்றாண்டு விழா இந்த நிகழ்வு டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கூறியதாவது: "இந்திய மொழிகளிடையே எந்த விரோதமும் இல்லை. ஒவ்வொரு மொழியும் மற்றொரு மொழியை வளப்படுத்திக்கொண்டு இருக்கிறது.

மொழிகளுக்கு இடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதை தவிர்த்துவிட்டு, மொழிகளை வளப்படுத்துவது நமது சமூக பொறுப்பு.பழமையான நாகரிகங்களைக் கொண்ட நாடு இந்தியா. இது புதிய திட்டங்களையும் புதிய மாற்றங்களையும் உண்டாக்கியுள்ளது. உலகின் பழமையான மொழி கொண்ட நாடு என்பதற்கு இது சான்றாகும். இந்த மொழி பன்முகத்தன்மை நமது ஒற்றுமைக்கு மிக அடிப்படையான ஒன்றாகும்" இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்