< Back
தேசிய செய்திகள்
மும்பையில் ஆட்டோ, டாக்சி கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
தேசிய செய்திகள்

மும்பையில் ஆட்டோ, டாக்சி கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

தினத்தந்தி
|
2 Feb 2025 3:43 PM IST

மராட்டியத்தில் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் 14.95 சதவீத கட்டண உயர்வு அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை,

மும்பை பெருநகர பகுதியில் மின்சார ரெயில், பெஸ்ட் பஸ்களுக்கு பிறகு பொதுமக்கள் ஆட்டோ, டாக்சிகளை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மும்பையில், சுமார் 5 லட்சம் ஆட்டோக்கள், 1 லட்சத்து 75 ஆயிரம் டாக்சிகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆட்டோவில் முதல் 1½ கி.மீ பயணம் செய்ய ரூ.23-ம், டாக்சிக்கு ரூ.28-ம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சி.என்.ஜி விலை உயர்வு, வாகன பராமரிப்பு, காப்பீடு செலவு, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என ஆட்டோ, டாக்சி சங்கத்தினர் அரசை வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து மும்பை பெருநகர மண்டல போக்குவரத்து ஆணையம் ரூ.3 கட்டணம் உயர்த்தி அனுமதி அளித்தது.

இதன்படி நேற்று முதல் ஆட்டோ, டாக்சிகளின் கட்டணம் ரூ.3 உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்தது. இதனால் குறைந்தபட்ச கட்டணமாக ஆட்டோவிற்கு ரூ.26, டாக்சிகளில் ரூ.31 ஆக உயர்ந்துள்ளது. நீலம், சில்வர் ஏ.சி டாக்சி கட்டணம் ரூ.40-ல் இருந்து ரூ.48 ஆக உயர்ந்துள்ளது.புதிய கட்டணத்திற்கு ஏற்ப மீட்டரில் மாற்றங்களை செய்த பிறகு ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் புதிய கட்டணத்தை பயணிகளிடம் இருந்து வசூலிக்க முடியும் என ஆணையம் தெரிவித்து உள்ளது. மராட்டியத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் 14.95 சதவீத கட்டண உயர்வு அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்