< Back
தேசிய செய்திகள்
அசாமில் ரூ. 14 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது
தேசிய செய்திகள்

அசாமில் ரூ. 14 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது

தினத்தந்தி
|
18 Feb 2025 1:47 PM IST

அசாமில் ரூ.14 கோடி மதிப்புள்ள ஹெராயின் மற்றும் யாபா மத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கவுகாத்தி,

அசாமின் கச்சார் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்டத்தின் ராம்பிரசாத்பூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வாகனத்தில் மறைத்து வைத்திருந்த 40,000 யாபா மாத்திரைகள் மற்றும் 260 கிராம் ஹெராயின் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களில் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.14 கோடி என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த போதைப்பொருள் கடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அசாம் காவல்துறையினரை அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா பாராட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்