< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காஷ்மீரில் வாகன விபத்தில் ராணுவ வீரர் உயிரிழப்பு, 8 பேர் படுகாயம்
|26 Oct 2024 4:47 PM IST
காஷ்மீரில் வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள தம்ஹல் ஹன்ஜிபோரா பகுதியில் நேற்று இரவு ராணுவ வீரர்கள் பயணம் செய்த ராணுவ வாகனம், எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 8 வீரர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரின் உடல்நிலையும் தற்போது சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.