< Back
தேசிய செய்திகள்
ஜம்முவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்...தேடும் பணி தீவிரம்
தேசிய செய்திகள்

ஜம்முவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்...தேடும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
25 Jan 2025 4:29 PM IST

தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் பத்தோடி கிராமத்திலுள்ள ராணுவ முகாமின் மீது நேற்று இரவு பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதற்கு ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியதில் அந்த பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க கத்துவா மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப்படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் 76-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதால் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்