< Back
தேசிய செய்திகள்
மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல்
தேசிய செய்திகள்

மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
8 Jan 2025 1:16 PM IST

மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இம்பால்,

மணிப்பூரின் தவுபால் மாவட்டத்தின் ஹங்கோயிலோக் அருகே உள்ள ஐரோங் டாங்குல் கிராமத்தில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த தேடுதல் நடவடிக்கையின்போது பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களில் கை துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் வெடிமருந்துகள் உள்ளடங்குவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், பிஷ்னுபூர் மாவட்டத்தை சேர்ந்த தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் ஒருவரை மணிப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். 26 வயதான அவர் நேற்று சுனுசிபாய் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்