ஆயுத படை மருத்துவ கல்லூரி வழங்கும் மருத்துவ படிப்புகள்
|ஆயுத படை மருத்துவ கல்லூரி தரம் வாய்ந்த மருத்துவ சேவையில் விருப்பம் உள்ளவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்த்து அவர்களை மருத்துவ அதிகாரிகளாக மாற்றி சிறந்த பணியையும் வழங்குகிறது.
ஆர்ம்டு போர்சஸ் மெடிக்கல் கல்லூரியில் (ARMED FORCES MEDICAL COLLEGE) மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., (M.B.B.S.) நர்சிங் மற்றும் டிப்ளமோ படிப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்த கல்லூரி புனே (PUNE) என்னும் இடத்தில் செயல்பட்டு வருகிறது. ஆயுத படை வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த மருத்துவக்கல்லூரி தரம் வாய்ந்த மருத்துவ சேவையில் விருப்பம் உள்ளவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்த்து அவர்களை மருத்துவ அதிகாரிகளாக மாற்றி சிறந்த பணியையும் வழங்குகிறது.
இந்திய ஆயுத படைகளில் மிஷன்ஸ் பதவி இவர்களுக்கு வழங்கப்படுவதால் சிறந்த உடற்பயிற்சியும் உளவியல் பயிற்சியும் இவர்களுக்கு இங்கு வழங்கப்படுகிறது. மருத்துவ படிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சிறந்த தலைமைப்பண்பு கொண்டவர்களாகவும், சிறந்த தகவல் தொடர்பு திறன் உடையவர்களாகவும், தேவையான உடல் தகுதி கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதில் இந்த கல்லூரி மிகுந்த அக்கறை கொண்டு, மிகச்சிறந்த பயிற்சிகளை மருத்துவ படிப்போடு வழங்குகிறது.
1. எம்.பி.பி.எஸ். (M.B.B.S.) பட்டப்படிப்பு
பொதுவாக எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு 4 1/2 ஆண்டுகள் நடத்தப்படும் படிப்பு ஆகும். மேலும், இன்டர்ன்ஷிப் (INTERNSHIP) எனப்படும் ஓராண்டு பயிற்சி எம்.பி.பி.எஸ். படிப்புடன் சேர்த்து வழங்கப்படும். அதன் பின்னர்தான் டாக்டர் பட்டம் வழங்கப்படும். இந்த கல்லூரியில் படித்து எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர்கள் "கமிஷன்டூ ஆபீஸர்ஸ்" (COMMISIONED OFFICERS) என்னும் பதவியில் பணியாற்ற வேண்டும்.
எனவே, எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்து படிக்கும் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும், படிப்பு முடிந்த பின்பு கண்டிப்பாக "கமிஷன்ட் ஆபீஸர் பதவியில் பணியாற்ற சம்மதிக்கிறோம்" என உறுதிமொழி பத்திரத்தையும் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தகுதிகள்
வயது வரம்பு
ஆர்ம்டு போர்சஸ் மெடிக்கல் கல்லூரியில் (ARMED FORCES MEDICAL COLLEGE) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்புபவர்கள் கண்டிப்பாக 17 வயது முதல் 22 வயதுக்குள் இருக்க வேண்டும். பி.எஸ்.சி. படிப்பில் இறுதி ஆண்டு படிப்பவர்களும் இந்த கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்து படிக்கலாம். ஆனால் இவர்கள் 24 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
இந்த கல்லூரி நடத்தும் நுழைவு தேர்வில் கண்டிப்பாக வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே இங்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
கல்வித்தகுதி
பிளஸ்டூ படிப்பில் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களை தேர்ந்தெடுத்து படித்தவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் இங்கு சேரலாம். இந்த பாடங்களில் எல்லாம் சராசரியாக 60%-க்கு குறையாமல் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டியது அவசியமாகும்.
ஆனால் ஆங்கில பாடத்தில் 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் மதிப்பெண்கள் பெற்று இருப்பது அவசியமாகும். அதேபோல் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் ஒவ்வொரு பாடத்திலும் தனித்தனியாக 50 சதவீத மதிப்பெண்கள் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். மேலும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கணித பாடத்தை ஒரு பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
மொத்தம் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள்
ஆர்ம்டு போர்சஸ் மெடிக்கல் காலேஜில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மொத்தம் 120 மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவார்கள். அவர்களில் 15 மாணவர்களும் 25 மாணவிகளும் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நுழைவு தேர்வு
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்புபவர்கள் கண்டிப்பாக நீட் நுழைவு தேர்வு எழுத வேண்டியது அவசியம் ஆகும். இந்த நுழைவு தேர்வின் அடிப்படையிலேயே ஆர்ம்டு போர்சஸ் மெடிக்கல் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
2. நர்சிங் படிப்புகள் (NURSING COURSES)
ஆர்ம்டு போர்சஸ் மெடிக்கல் காலேஜில் கீழ்கண்ட நர்சிங் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
1. பேசிக் பி.எஸ்.சி. நர்சிங் (BASIC NURSING COURSE)–மொத்தம் 40 இடங்கள் உள்ளன. இது நான்கு ஆண்டுகள் படிப்பாகும்.
2. போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி. நர்சிங் (POST BASIC NURSING COURSE)-மொத்தம் 20 இடங்கள் உள்ளன. இது இரண்டு வருட படிப்பாகும்.
3. எம்.எஸ்.சி. நர்சிங் (M.Sc NURSING COURSE)-மொத்தம் 10 இடங்கள் உள்ளன. இது இரண்டு வருட படிப்பாகும்
4. போஸ்ட் பேசிக் டிப்ளமா/சர்டிபிகேட் கோர்ஸ் இன் ஆபரேஷன் ரூம் நர்சிங் (POST BASIC DIPLOMA/CERTIFICATE COURSE IN OPERATION ROOM NURSING)-மொத்தம் 8 இடங்கள் உள்ளன. இது இரண்டு வருட படிப்பாகும்.
5. போஸ்ட் பேசிக் டிப்ளமா/சர்டிபிகேட் கோர்ஸ் இன் ஆர்த்தோபிடிக் அண்ட் ரிஹபிலிடேசன் நர்சிங் (POST BASIC DIPLOMA/ CERTIFICATE COURSE IN ORTHOPEDIC AND REHABILITATION NURSING) மொத்தம் 6 இடங்கள் உள்ளன. இது 1 வருட படிப்பாகும்.
6. போஸ்ட் பேசிக் டிப்ளமோ/சர்டிபிகேட் கோர்ஸ் இன் ஆங்காலஜி நர்சிங் (POST BASIC DIPLOMA/CERTIFICATE COURSE IN ONCOLOGY NURSING) மொத்தம் 4 இடங்கள் உள்ளன. இது 1 வருட படிப்பாகும்.
7. போஸ்ட் பேசிக் டிப்ளமோ/சர்டிபிகேட் கோர்ஸ் இன் கார்டியோதொராசிக் நர்சிங் (POST BASIC DIPLOMA/CERTIFICATE COURSE IN CARDIOTHORACIC NURSING) மொத்தம் 4 இடங்கள் உள்ளன. இது 1 வருட படிப்பாகும்.
8. போஸ்ட் பேசிக் டிப்ளமோ/சர்டிபிகேட் கோர்ஸ் இன் நியூநேட்டல் நர்சிங் (POST BASIC DIPLOMA/ CERTIFICATE COURSE IN NEONATAL NURSING) மொத்தம் 4 இடங்கள் உள்ளன. இது 1 வருட படிப்பாகும்.
3. கிராஜுவேஷன் கோர்சஸ் பார் பாராமெடிக்ஸ் (GRADUATION COURSES FOR PARAMEDICS)
I. பேச்சுலர் ஆப் பாராமெடிக்கல் டெக்னாலஜி (பி.பி.எம்.டி.) கோர்சஸ் (BACHELOR OF PARAMEDICAL TECHNOLOGY (BPMT) COURSES)
1. பேச்சுலர் ஆப் பாராமெடிக்கல் டெக்னாலஜி (லேபரட்டரி டெக்னீசியன்) (BACHELOR OF PARAMEDICAL TECHNOLOGY (Laboratory Technician))
2. பேச்சுலர் ஆப் பாராமெடிக்கல் டெக்னாலஜி ரேடியோகிராபிக் டெக்னீசியன் (BACHELOR OF PARAMEDICAL TECHNOLOGY (Radiographic Technician))
3. பேச்சுலர் ஆப் பாராமெடிக்கல் டெக்னாலஜி (ரேடியோதெரபி டெக்னீசியன்) (BACHELOR OF PARAMEDICAL TECHNOLOGY) (Radiotherapy Technician))
4. பேச்சுலர் ஆப் பாராமெடிக்கல் டெக்னாலஜி (கார்டியோ டெக்னீசியன்) (BACHELOR OF PARAMEDICAL TECHNOLOGY (Cardio Technician))
5. பேச்சுலர் ஆப் பாராமெடிக்கல் டெக்னாலஜி (நீரோ டெக்னீசியன்) (BACHELOR OF PARAMEDICAL TECHNOLOGY (Neuro Technician))
6. பேச்சுலர் ஆப் பாராமெடிக்கல் டெக்னாலஜி (பிளட் ட்ரான்ஸ்பூஷன் டெக்னீசியன்) (BACHELOR OF PARAMEDICAL TECHNOLOGY (Blood Transfusion Technician))
7. பேச்சுலர் ஆப் பாராமெடிக்கல் டெக்னாலஜி ஆப்ட்டோமெட்ரி டெக்னீசியன் (BACHELOR OF PARAMEDICAL TECHNOLOGY (Optometry Technician))
8. பேச்சுலர் ஆப் பாராமெடிக்கல் டெக்னாலஜி (ஆபரேஷன் தியேட்டர் டெக்னீசியன்) (BACHELOR OF PARAMEDICAL TECHNOLOGY (Operation Theatre Technician))
9. பேச்சுலர் ஆப் பாராமெடிக்கல் டெக்னாலஜி எண்டோஸ்கோபி டெக்னீசியன் (BACHELOR OF PARAMEDICAL TECHNOLOGY (Endoscopy Technician))
10. பேச்சுலர் ஆப் பாராமெடிக்கல் டெக்னாலஜி (கம்யூனிட்டி மெடிசின்/ஹெல்த் இன்ஸ்பெக்டர்/எமர்ஜென்சி மெடிக்கல் சர்வீசஸ்) (BACHELOR OF PARAMEDICAL TECHNOLOGY (Community Medicine/HealthInspector/Emergency Medical Services))
இவை தவிர, டெக்னிக்கல் ட்ரேட் டிரைனிங் (TECHNICAL TRADE TRAINING) சம்பந்தப்பட்ட பயிற்சிகளும் இங்கு வழங்கப்படுகின்றன. குறிப்பாக,
1. லேபரட்டரி அசிஸ்டன்ட் (Laboratory Assistant)
2. எக்ஸ்ரே அசிஸ்டன்ட் (X-Ray Assistant)
3. பார்மாகாலஜி (Pharmacology)
4. டென்டல் டெக்னீசியன் (Dental Technician)
5. டென்டல் ஹைஜீனிஸ்ட் (Dental Hygenist)
6. டென்டல் ஆபரேஷன் ரூம் அசிஸ்டன்ட் (Dental Operating Room Assistant)
7. ஹெல்த் அசிஸ்டன்ட் (Health Assistant)
8. பிளட் ட்ரான்ஸ்பியூஷன் அசிஸ்டன்ட் (Blood Transfusion Assistant)
ஆகிய பயிற்சிகளும் இங்கே வழங்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு
முகவரி:
Officer-in-Charge, Admission Cell,
Armed Forces Medical College,
Solapur Road,
Pune–411040
Landline: 020-29950170
இவை தவிர, http://www.afmc.nic.in, www.mcc.nic.in என்னும் முகவரியிலும் இந்த படிப்புகள் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.