< Back
தேசிய செய்திகள்
ஆந்திரா: ரோஜா பின்னடைவு
தேசிய செய்திகள்

ஆந்திரா: ரோஜா பின்னடைவு

தினத்தந்தி
|
4 Jun 2024 3:05 PM IST

நடிகை ரோஜா, நகரி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

திருப்பதி,

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ம் தேதி முடிவடைந்ததால், அந்த 2 மாநிலங்களுக்கும் 2-ம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் நடிகை ரோஜா, நகரி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி இவர் 43,746 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் பானுபிரகாஷ் 80,233 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் ரோஜா 36,487 வாக்குகள் பின்னிலையில் உள்ளார்.

மேலும் செய்திகள்