< Back
தேசிய செய்திகள்
ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு
தேசிய செய்திகள்

ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
12 July 2024 5:56 PM IST

தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ. அளித்த புகாரின் பேரில் ஜெகன்மோகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமராவதி,

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாகவும், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். இந்த நிலையில், ஆந்திர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற அதிகாரிகள் என 5 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் உண்டி தொகுதி எம்.எல்.ஏ. கே.ரகுராம கிருஷ்ண ராஜு புகார் அளித்ததை அடுத்து இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. கிருஷ்ண ராஜு கடந்த மாதமே தனது புகாரை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பியிருந்ததாகவும், சட்ட ரீதியாக ஆலோசனைப் பெறப்பட்டு, தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த புகாரில், கடந்த 2011ம் ஆண்டு, கொரோனா தொற்று தீவிரமடைந்திருந்த நிலையில், தன் மீது பொய் வழக்கு போடப்பட்டு, தான் போலீசாரால் கைது செய்யப்பட்டபோது துன்புறுத்தப்பட்டதாகவும், முன்னாள் முதல்-மந்திரி மற்றும் மூத்த அதிகாரிகள் தங்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாகவும் அதில் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்