< Back
தேசிய செய்திகள்
Anant Ambani gifts his groomsmen luxury watches worth Rs 2 cr, video goes viral
தேசிய செய்திகள்

ஆனந்த் அம்பானி திருமணத்தில் பிரபலங்களுக்கு தலா ரூ.2 கோடி மதிப்புள்ள பரிசு

தினத்தந்தி
|
15 July 2024 7:19 AM IST

நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான், கமல்ஹாசன், பிரபாஸ், சஞ்சித் கெக்டே, தீ உள்ளிட்ட 25 முக்கிய பிரபலங்களுக்கு பரிசு கிடைத்தது.

மும்பை,

பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சி மும்பையில் கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் கடந்த13-ந் தேதி இரவு ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.

உலகமே உற்று நோக்கிய இந்த திருமணத்தில் உள்ளூர் தலைவர்கள் முதல் உலக தலைவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். ஹாலிவுட் திரை நட்சத்திரங்கள், இந்தியாவின் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில், முக்கிய பிரபலங்களுக்கு தலா ரூ,2 கோடிக்கு அதிமான மதிப்புடைய தங்க வாட்ச் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான், கமல்ஹாசன், பிரபாஸ், சஞ்சித் கெக்டே, தீ உள்ளிட்ட 25 முக்கிய பிரபலங்களுக்கு இந்த பரிசு கிடைத்தது.

அவர்கள் அனைவரும் ஒன்றாக வாட்ச் அணிந்த கைகளை காட்டும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. பரிசாக வழங்கப்பட்ட அந்த வாட்ச் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது.

மேலும் செய்திகள்