< Back
தேசிய செய்திகள்
இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து காதலிக்கும்படி மிரட்டிய ஊழியர்
தேசிய செய்திகள்

இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து காதலிக்கும்படி மிரட்டிய ஊழியர்

தினத்தந்தி
|
4 Nov 2024 9:34 PM IST

இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் பகுதியில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் சஞ்சய்குமார் என்பவரும் ஊழியராக வேலை செய்கிறார். இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியதால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், சஞ்சய்குமார் தனது செல்போன் பழுதாகி விட்டதாக கூறி, இளம்பெண்ணின் செல்போனை வாங்கி சில நாட்கள் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது ஒரு செல்போன் செயலியை சஞ்சய்குமார் அதில் பதிவிறக்கம் செய்துள்ளார். அந்த செல்போன் செயலி இளம்பெண்ணுக்கு தெரியாத வண்ணம் செல்போனில் ரகசியமாக பாதுகாத்து வைத்துவிட்டு, சஞ்சய்குமார் கொடுத்திருந்தார்.

இளம்பெண்ணின் செல்போனில் இருக்கும் செயலியை தனது செல்போன் மூலமாகவே ஆன் செய்து கேமராவை இயக்கி அதன்மூலம் இளம்பெண் குளிக்கும் வீடியோ, ஆபாச புகைப்படங்களை தனது செல்போன் மூலமாக சஞ்சய்குமார் பதிவு செய்து கொண்டார்.

பின்னர் அந்த ஆபாச வீடியோ, புகைப்படங்களை இளம் பெண்ணுக்கு அனுப்பி அவர் மிரட்டியுள்ளார். பணம் கொடுக்கும்படியும், தன்னை காதலிக்கும்படியும் இளம்பெண்ணை சஞ்சய்குமார் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சஞ்சய்குமாரை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்