< Back
தேசிய செய்திகள்
ஏர் இந்தியா விமானத்தில் கிடந்த வெடிமருந்து குப்பி: பயணிகள் அதிர்ச்சி
தேசிய செய்திகள்

ஏர் இந்தியா விமானத்தில் கிடந்த வெடிமருந்து குப்பி: பயணிகள் அதிர்ச்சி

தினத்தந்தி
|
2 Nov 2024 10:49 PM IST

துபாயில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் வெடிமருந்து குப்பி கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டுள்ளன. பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் அனைத்தும் புரளி என தெரியவந்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கடந்த 27 ம் தேதி துபாயில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்துள்ளது. அதன் ஒரு இருக்கைக்கு அடியில் வெடிமருந்து குப்பி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.

வெடி மருந்து குப்பி கிடந்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. விமானத்தில் வெடி மருந்து குப்பி கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பாதுகாப்பு மீறலாக அமைந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்