< Back
தேசிய செய்திகள்
மராட்டிய சட்டசபை தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு
தேசிய செய்திகள்

மராட்டிய சட்டசபை தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

தினத்தந்தி
|
10 Nov 2024 12:24 PM IST

மராட்டியத்தில் மகளிருக்கு மாதம் தோறும் அளிக்கப்படும் நிதி உதவி ரூ.1,500-ல் இருந்து ரூ.2,100 ஆக உயர்த்தப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் சட்ட மன்ற தேர்தல் வருகிற 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக சிவசேனா( ஷிண்டே) தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) ஆகிய எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இரு கூட்டணிகளும் தேர்தல் களத்தில் வாக்குறுதிகளை வாரி இறைத்து வருகின்றன. பெண்களுக்கு மாதம் ரூ.3000, அரசு பஸ்சில் இலவச பயணம் போன்ற வாக்குறுதியை காங்கிரசின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையில், " விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி; பெண்களுக்கு மாதம் ரூ.1,500 க்கு பதிலாக ரூ. 2,100 வழங்கப்படும்; 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்" உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்