< Back
தேசிய செய்திகள்
திருப்பதி சென்ற பக்தர்கள் மீது ஆம்புலன்ஸ் மோதியது- 2 பெண்கள் பலி
தேசிய செய்திகள்

திருப்பதி சென்ற பக்தர்கள் மீது ஆம்புலன்ஸ் மோதியது- 2 பெண்கள் பலி

தினத்தந்தி
|
6 Jan 2025 5:04 PM IST

பாதயாத்திரையாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், சாலையோரங்களில் விழிப்புடன் செல்லும்படி காவல்துறை அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.

சந்திரகிரி:

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது பின்னால் வந்த ஆம்புலன்ஸ் மோதியது.

இன்று அதிகாலை 4 மணியளவில் ரங்கம்பேட்டை-மங்காபுரம் இடையே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 2 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

கடும் பனிப்பொழிவு காரணமாக, டிரைவரின் கண்களுக்கு சாலை சரியாக புலப்படாத நிலையில், விபத்து நிகழ்ந்திருக்கலாம் என திருப்பதி காவல் கண்காணிப்பாளர் எல்.சுப்பா ராயுடு தெரிவித்துள்ளார்.

பாதயாத்திரையாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், சாலையோரங்களில் விழிப்புடன் சென்று விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். பனிமூட்டம் காரணமாக சாலையில் மிக குறைந்த தொலைவுக்கு மட்டுமே கண்ணுக்கு புலப்படுவதாகவும் அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்