< Back
தேசிய செய்திகள்
Ambanis give Haldiram’s aloo bhujia, sev and more to Reliance employees for Anant Ambani wedding
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு இனிப்புகளுடன் வெள்ளி நாணயம் பரிசளித்த அம்பானி குடும்பம்

தினத்தந்தி
|
13 July 2024 1:54 PM IST

திருமண விழாவைக் கொண்டாடும் விதமாக ஊழியர்களுக்கு பரிசுப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது.

மும்பை,

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சி நாளை வரை மும்பையில் நடைபெற உள்ளது. இதனால், மும்பை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதில் உள்ளூர் திரை பிரபலம் முதல் உலக பிரபலம் வரை பலரும் பங்கேற்று வருகின்றனர்.

திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் 5 ஸ்டார் ஓட்டலில் தங்கும் வசதி மற்றும் ஆடம்பர பரிசுகளுடன் நடத்தப்பட்டு வரும்நிலையில், ஊழியர்களும் விழாவைக் கொண்டாடும் விதமாக ஒரு பரிசுப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்தான புகைப்படங்களை ஊழியர்கள் தங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த பரிசு பெட்டியில், ஒரு வெள்ளி நாணயம் மற்றும் இனிப்புகள் உள்ளன.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முன்னதாக, முகேஷ் அம்பானி குடும்பம் 50 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தது. மேலும், அவர்களுக்கு, தங்கம், வெள்ளி ஆபரணங்கள், மளிகை பொருட்கள் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்களுடன் ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்