< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற ஆகாசா ஏர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

File image

தேசிய செய்திகள்

டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற ஆகாசா ஏர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தினத்தந்தி
|
16 Oct 2024 5:31 PM IST

பெங்களூரு புறப்பட்ட ஆகாசா ஏர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியில் இருந்து க்யூபி 1335 என்ற ஆகாசா ஏர் விமானம் 180க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து பிற்பகல் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது.

டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து பயணிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். இதற்கிடையில் விமான நிலையத்தில் தயாராக இருந்த வெடிகுண்டு நிபுணர்கள். விமானம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த பொருளும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 நாட்களில் இந்தியாவில் 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான போக்குவரத்து அமைச்சகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்