< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ரஷியாவில் அதிபர் புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு
|13 Sept 2024 6:36 AM IST
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மாளிகையில் ரஷிய அதிபர் புதினை அஜித் தோவல் நேற்று சந்தித்தார்
மாஸ்கோ,
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷியா சென்றார். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அஜித் தோவல் பங்கேற்றார்.
மாநாட்டின் இடையே அவர் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களை தனித்தனியே சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மாளிகையில் ரஷிய அதிபர் புதினை அஜித் தோவல் நேற்று சந்தித்தார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் பரஸ்பர நலன்சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.