< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜார்கண்ட் மாநில புதிய டி.ஜி.பி.யாக அஜய்குமார் சிங் நியமனம்
|22 Oct 2024 6:48 AM IST
மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அஜய்குமார் சிங், புதிய டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்
ராஞ்சி,
ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் ஆனது, நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் பொறுப்பு டி.ஜி.பி.யாக இருந்த அனுராக் குப்தாவை சில தினங்களுக்க முன் மாற்றி தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அவருக்குப் பதிலாக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அஜய்குமார் சிங், புதிய டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அஜய்குமார், 1989-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வு பெற்றவர்.