< Back
தேசிய செய்திகள்
இடுக்கியில் அய்யப்ப பக்தர்களுக்கு உதவி மையங்கள் நாளை திறப்பு
தேசிய செய்திகள்

இடுக்கியில் அய்யப்ப பக்தர்களுக்கு உதவி மையங்கள் நாளை திறப்பு

தினத்தந்தி
|
15 Nov 2024 1:31 AM IST

இந்த உதவி மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூணாறு,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, இடுக்கி மாவட்டத்தின் வழியாக ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். இவர்களின் நலன் கருதி வருவாய்த்துறை சார்பில் தகவல் மையங்கள் நாளை (சனிக்கிழமை) திறக்கப்பட உள்ளது.

இடுக்கி மாவட்ட கலெக்டர் அலுவலகம், பீர்மேடு தாலுகா மஞ்சுமலை கிராம நிர்வாக அலுவலகம் ஆகிய இடங்களில் தகவல் மையங்கள் திறக்கப்படுகிறது. இந்த தகவல் மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்.

இதேபோல் பக்தர்களுக்காக உதவி மையங்களும் நாளை திறக்கப்படுகிறது. இந்த உதவி மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இந்த தகவல் மையங்கள் மற்றும் உதவி மையங்களுக்கு அரசு சார்பில் தனித்தனியாக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்