< Back
தேசிய செய்திகள்
Actor Rakul Preet Singhs Brother Arrested In Drugs Case
தேசிய செய்திகள்

போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகையின் சகோதரர் கைது

தினத்தந்தி
|
16 July 2024 8:27 AM IST

ரூ. 35 லட்சம் மதிப்புள்ள 199 கிராம் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஐதராபாத்,

பிரபல பாலிவுட் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த 12-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இவரது சகோதரர் அமன் பிரீத் சிங். தற்போது இவரை போதைப்பொருள் வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் போதைப்பொருள் விற்பனைக்காக கொண்டுவரப்படுவதாக அம்மாநில போதைப்பொருள் தடுப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போதைப்பொருள் கடத்தல் முயற்சியை போலீசார் முறியடித்தனர்.

இதில், பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர் அமன் பிரீத் சிங் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். நரசிங்கியின் ஹைதர்ஷாகோட்லாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்திய தெலுங்கானா போலீசார், அவர்களிடம் இருந்து ரூ. 35 லட்சம் மதிப்புள்ள 199 கிராம் கோகோயின், 2 பாஸ்போர்ட்கள், 2 பைக்குகள் மற்றும் 10 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ரகுல் பிரீத் சிங்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்