< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் அரசாங்கத்தை நடத்த பாஜக கட்சியில் ஆளில்லை - அதிஷி
தேசிய செய்திகள்

டெல்லியில் அரசாங்கத்தை நடத்த பாஜக கட்சியில் ஆளில்லை - அதிஷி

தினத்தந்தி
|
17 Feb 2025 5:48 PM IST

டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 48 பாஜக எம்.எல்.ஏ.க்களில் யாரையும் பிரதமர் நரேந்திர மோடி நம்பவில்லை என்று அதிஷி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை தெரிவித்தன. அதன்படி பா.ஜனதா 48 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனால் டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் பா.ஜ.க. ஆட்சி அமைக்க உள்ளது.

தேர்தலின்போது பா.ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளர் யார்? என்று குறிப்பிடப்படவில்லை இருப்பினும் டெல்லி பொதுமக்கள் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். டெல்லியின் புதிய முதல்-மந்திரி யார்? என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் அரசாங்கத்தை அமைத்து முறையாக நடத்த பாஜக கட்சியில் ஆளில்லை என டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அதிஷி விமர்ச்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது,

தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்திட்ட 10 நாட்கள் ஆகிறது. முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளின் பெயர்களை கடந்த 9ம் தேதியே பாஜக அறிவித்து, வளர்ச்சிக்கான பணிகளை தொடங்கும் என்றும் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், டெல்லியில் அரசாங்கத்தை அமைத்து முறையாக நடத்த பாஜக கட்சியில் ஆட்கள் இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது. டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 48 பாஜக எம்.எல்.ஏ.க்களில் யாரையும் பிரதமர் நரேந்திர மோடி நம்பவில்லை. பாஜகவிடம் தொலைநோக்கு பார்வையோ திட்டமிடலோ இல்லை. அரசை நடத்த திறன் கொண்டவர்கள் யாரும் இல்லையென்றால் மக்களுக்கான பணிகளை எப்படி செய்வார்கள்?. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்