< Back
தேசிய செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டிற்கு வந்த நடிகர் அமீர் கானை வரவேற்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டிற்கு வந்த நடிகர் அமீர் கானை வரவேற்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்

தினத்தந்தி
|
9 Aug 2024 10:49 AM GMT

சுப்ரீம் கோர்ட்டிற்கு வந்த நடிகர் அமீர் கானை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வரவேற்றார்.

டெல்லி,

இந்திய சுப்ரீம் கோர்ட்டின் 75வது ஆண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று லாபடா லேடீஸ் என்ற திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

நிதான்ஷி கோயல், ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா, பிரதிபா ரந்தா உள்பட பலர் நடித்துள்ள இப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது.

கிரண் ராவ் இயக்கத்தில், நடிகர் அமீர் கான் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் பாலின சமத்துவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாகும்.

இத்திரைப்படம் இன்று மாலை சுப்ரீம் கோர்ட்டில் திரையிடப்பட உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர், பதிவுத்துறை அதிகாரிகளும் இப்படத்தை காண உள்ளனர்.

இந்நிலையில், லாபடா லேடீஸ் திரைப்படம் திரையிடப்பட உள்ள நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான அமீர் கான் சுப்ரீம் கோர்ட்டிற்கு வந்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டிற்கு வந்த நடிகர் அமீர் கானை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வரவேற்றார்.

அமீர் கானை வரவேற்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், கோர்ட்டிற்குள் கூட்ட நெரிசல் ஏற்பட நான் விரும்பவில்லை. ஆனால், திரைப்படத்தை திரையிட வந்துள்ள அமீர் கானை நான் வரவேற்கிறேன். இயக்குனர் கிரண் ராவும் விரைவில் நம்முடன் இணைந்து திரைப்படத்தை பார்ப்பார்' என்றார்.

மேலும் செய்திகள்