< Back
தேசிய செய்திகள்
கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மகனை கொன்ற பெண்
தேசிய செய்திகள்

கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மகனை கொன்ற பெண்

தினத்தந்தி
|
24 Nov 2024 8:39 AM IST

கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மகனை கொன்று நாடகமாடிய பெண்ணை கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் ஹூவினகடஹள்ளியை அடுத்த இட்டகி கிராமத்தை சேர்ந்தவர் அனுமந்தம்மா. இவரது கணவர் நீலப்பா. இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அனுமந்தம்மாவுக்கு விட்டல் என்ற மகன் இருந்தான்.

இந்த நிலையில் அனுமந்தம்மாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த மல்லப்பா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த விட்டல், தாயை கண்டித்துள்ளார். ஆனால் அனுமந்தம்மா கேட்கவில்லை. மாறாக தனது கள்ளக்காதலனிடம் மகனை கொலை செய்யும்படி கூறியுள்ளார்.

அதன்படி கடந்த சனிக்கிழமை மல்லப்பா மற்றும் அவரது நண்பர் மஞ்சுநாத் ஆகியோர், சிறுவனை கடத்தி சென்று கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் போலீசில் மகன் மாயமானதாக அனுமந்தம்மா புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்தபோது, அனுமந்தம்மா மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்பட 3 பேர் சேர்ந்து சிறுவனை கொன்றது நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்