< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்த டிக்கெட் பரிசோதகர்
|28 Oct 2024 4:31 AM IST
டிக்கெட் பரிசோதகரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லக்னோ,
பீகாரை சேர்ந்த ஒரு இளம்பெண், கோண்டியா-பராவுனி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சம்பவத்தன்று பயணித்துக் கொண்டு இருந்தார். ரெயில் உத்தரபிரதேசத்தின் பால்லியா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், அந்த பெட்டிக்கு டிக்கெட் பரிசோதகராக வந்த ராகேஷ்குமார் என்பவர் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்தார். பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அவர்கள் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பரிசோதகரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.