< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

அல்ஜீரியா சென்றடைந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சிறப்பான வரவேற்பு

தினத்தந்தி
|
14 Oct 2024 12:53 AM IST

அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகரை சென்றடைந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் வரவேற்றார்.

அல்ஜீர்ஸ்,

அல்ஜீரியா, மொரீசேனியா மற்றும் மலாவி ஆகிய 3 ஆப்பிரிக்க நாடுகளுக்கு 13 முதல் 19 வரையிலான நாட்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனை, மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதன்படி, 3 நாடுகளுக்கான அவருடைய சுற்றுப்பயணம் நேற்று தொடங்கியது.

இந்நிலையில், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக முர்மு, அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகரை சென்றடைந்து உள்ளார். அவரை அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் வரவேற்றார்.

அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய ஜனாதிபதி என்னும் பெருமையை முர்மு பெற்றுள்ளார். அவருடன் இந்திய சமூகத்தினர் ஒன்றாக சேர்ந்து, குழு புகைப்படம் ஒன்றை எடுத்து கொண்டனர்.

இதன்பின்னர், இந்திய சமூகத்தினரின் குழந்தைகளுக்கு அன்பு பரிசுகளை வழங்கி அவர்களுடன் உரையாடினார். இந்த சுற்றுப்பயணத்தில், அந்நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு கூட்டங்களை நடத்தி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதேபோன்று, இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுடனும் முர்மு உரையாட உள்ளார்.

மேலும் செய்திகள்