< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பேனாவிற்காக ஏற்பட்ட சண்டை - விடுதி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
|17 Nov 2024 2:31 PM IST
விடுதியின் 4-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
பல்நாடு,
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நரசாராவ்பேட்டையில் உள்ள பாவனா இளநிலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் அனுஷா. விடுதியில் சக மாணவிகளுடன் பேனா தொடர்பாக சண்டை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக மாணவி அனுஷா மன வேதனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாணவி அனுஷா திடீரென விடுதியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கீழே விழுந்து பலத்த காயமடைந்த அனுஷாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேனா தகராறு தான் காரணமா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.