< Back
தேசிய செய்திகள்
வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட மோதல்; மத்திய பிரதேசத்தில் தலித் இளைஞர் அடித்து கொலை
தேசிய செய்திகள்

வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட மோதல்; மத்திய பிரதேசத்தில் தலித் இளைஞர் அடித்து கொலை

தினத்தந்தி
|
27 Nov 2024 5:03 PM IST

மத்திய பிரதேசத்தில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட மோதலில் தலித் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த தலித் இளைஞர் நரத் ஜாதவ்(28) என்பவர், சிவ்புரி மாவட்டத்தில் உள்ள இந்திரகர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்றைய தினம் தனது உறவினருக்கு சொந்தமான வயலில் நரத் ஜாதவ் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.

அப்போது கிராம தலைவர் பாதம் சிங் மற்றும் அவரது உறவினர்கள் 7 பேர் சேர்ந்து நரத் ஜாதவிடம் வயலில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், கிராம தலைவர் பாதம் சிங் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து நரத் ஜாதவை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நரத் ஜாதவ், சிவ்புரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனிடையே கிராம தலைவரும், அவரது உறவினர்களும் சேர்ந்து தலித் இளைஞரை கடுமையாக தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்