< Back
தேசிய செய்திகள்
தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் குழந்தை உயிரிழப்பு... அதிர்ச்சி சம்பவம்
தேசிய செய்திகள்

தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் குழந்தை உயிரிழப்பு... அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
17 July 2024 11:59 AM IST

வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை தெரு நாய்கள் கொடூரமாக கடித்து குதறின.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஜவஹர் நகரில் வீட்டின் முன் ஒன்றரை வயது குழந்தை விளையாடி கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் இருந்த தெரு நாய்கள் குழந்தையின் தலை முடியை கவ்வி இழுத்து சென்று கொடூரமாக கடித்துக் குதறின.

சம்பவ இடத்தில் சிதறி கிடந்த குழந்தையின் தலை முடியை பார்த்து அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து குழந்தையின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. நாய்கள் கடித்ததில் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வரும் நிலையில், நாய்கள் கடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்