< Back
தேசிய செய்திகள்
முன்னாள் மந்திரியை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி - சமூகவலைதளத்தில் வைரல்
தேசிய செய்திகள்

முன்னாள் மந்திரியை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி - சமூகவலைதளத்தில் வைரல்

தினத்தந்தி
|
24 Jun 2024 12:51 AM IST

கே.ராதாகிருஷ்ணன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சேலக்கரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே.ராதாகிருஷ்ணன். இவர் பினராயி விஜயன் மந்திரி சபையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தேவசம் போர்டு மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் கே.ராதாகிருஷ்ணன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆலத்தூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் இவர் மட்டுமே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தநிலையில் முன்னாள் மந்திரி கே ராதாகிருஷ்ணனை சந்திப்பதற்காக பத்தனம்திட்டா மாவட்ட முன்னாள் கலெக்டரும், விழிஞ்ஞம் துறைமுக இயக்குனருமான டாக்டர் எஸ்.திவ்யா அய்யர் தனது கணவருடன் அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது அவரை, திவ்யா அய்யர் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார்.

அந்த புகைப்படத்தை திவ்யா அய்யர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த புகைப்படம் சில நிமிடங்களில் வைரலாக பரவியது.

மேலும் செய்திகள்