உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மூதாட்டி உயிரிழப்பு
|35 வயதுடைய ராகேஷ் என்ற குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் ஹபீஸ்கஞ்ச் பகுதியில் 85 வயது மூதாட்டி ஒருவர், கணவன் மற்றும் மகனை இழந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். அருகே அவரது உறவினர்கள் மற்றும் மருமகள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த நபர், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அங்கு வந்த மூதாட்டியின் மருமகள் கூச்சலிட்டு அந்த நபரை விரட்டியுள்ளார். இதனால் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார்.
இந்த சம்பவம் தொடர்பாக மூதாட்டியில் மருமகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான முதாட்டி, உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, 35 வயதுடைய ராகேஷ் என்ற குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் குடிகாரர் என்றும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் அதிகாரி ஒருவர் கூறினார்.