மணிப்பூரில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் 8 பேர் கைது
|மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்பான ஐக்கிய விடுதலை முன்னணியை சேர்ந்த 8 நபர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
இம்பால்,
மணிப்பூர் மாநில தவுபல் மாவட்டத்தில் எல்லைப் பிரிக்கும் செயல்முறையைத் தடுத்து நிறுத்த முயன்ற தடை செய்யப்பட்ட அமைப்பான ஐக்கிய விடுதலை முன்னணியை (பம்பேய்) சேர்ந்த 8 நபர்கள் நேற்று காலவ்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அவர்களிடமிருந்து 3 ஏகே 47 ரைபில்கள், 2 ஏகே 56 ரைபில்கள், 1 பிஸ்டல், 147 ஏகே 47 துப்பாக்கி குண்டுகள், 20 எம் வகையை சேர்ந்த 16 துப்பாக்கி குண்டுகள், 25 பிஸ்டல் குண்டுகள், வெடிமருந்துகள், 16 கைப்பேசிகள், 1 எஸ்யூவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பயங்கரவாத செயல்களில் ஈடுபடமாட்டோம் என கடந்தாண்டு மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, இம்பால் மேற்கில் உள்ள டாப் லீராக் மச்சின் பகுதியில் தடைசெய்யப்பட்ட மக்கள் விடுதலைப்படையை சேர்ந்த நபர் ஒருவரை நேற்று (அக். 28) போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் இம்பால் பகுதியில் மக்களை மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.