< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பாகிஸ்தானில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
|6 Nov 2024 2:53 AM IST
7 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதிகள் அதிகளவில் ஊடுருவுகின்றனர். இதனை கட்டுப்படுத்த எல்லை பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அப்போது வஜிரிஸ்தான் பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 7 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதனால் அங்கு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.