< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தமிழகத்தைச் சேர்ந்த 7 காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் 'தக்ஷதா பதக்' விருது
|31 Oct 2024 8:52 PM IST
தமிழகத்தைச் சேர்ந்த 7 காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் 'தக்ஷதா பதக்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
2024-ம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் 'கேந்திரிய கிரிமந்திரி தக்ஷதா பதக்' விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறப்பு நடவடிக்கை, விசாரணை, தடய அறிவியல், உளவு உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் இந்த விருது வழங்கப்படுவது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மத்திய ஆயுதக்காவல் படையைச் சேர்ந்த மொத்தம் 463 காவலர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.பி. வந்திதா பாண்டே, காவல் ஆய்வாளர்கள் அம்பிகா மற்றும் உதயகுமார், எஸ்.பி. மீனா, ஏ.எஸ்.பி. கார்த்திகேயன் உள்ளிட்ட 7 பேருக்கு 'தக்ஷதா பதக்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.