< Back
தேசிய செய்திகள்
ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

தினத்தந்தி
|
13 Nov 2024 12:50 PM IST

ஜம்மு-காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.43 மணிக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், பொருட்சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாகவே காஷ்மீரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்